மைத்திரியின் முகத்தை பார்க்க ஆசைப்படுகின்றேன்!

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகத்தைப் பார்க்க ஆசைப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களை சந்திக்கும் போது ஜனாதிபதியின் முகம் சிவப்பாக மாறுவதனை பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“இன்றைய நாள் குறித்து நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன், அது ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுக் கொள்வது தொடர்பில் அல்ல, ஜனாதிபதி மைத்திரி எவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களை எதிர்நோக்குவார் என்பதனை பார்வையிடுவதற்காகவே” என ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பிரதமர் பதவி ஏற்பு நிகழ்வில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers