பதவியேற்றார் ரணில்! கொழும்பில் இலட்சக்கணக்கானோரை திரட்டும் ஐ.தே.க

Report Print Kamel Kamel in அரசியல்

எமது போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் சற்று முன்னர் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனநாயகத்திற்கான போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. நாம் பூரண ஜனநாயகத்தை வென்றெடுக்கும் வரையில் போராடுவோம்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். எனினும் இந்த நிகழ்வுகளை செய்தி அறிக்கையிட ஊடக நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இதனால் தான் நாம் நாளையதினம் காலி முகத்திடலுக்கு இலட்சக்கணக்கான மக்களை திரட்டுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாளைய மக்கள் பேரணி தொடர்பில் அறிவித்த போதிலும் ஊடகங்களில் அவை வெளிப்படுத்தப்படவில்லை.

நாளை பிற்பகல் 1.00 மணிக்கு அனைவரும் காலி முகத்திடலுக்கு வருமாறு அழைப்பு விடுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers