அலரி மாளிகையில் குவிந்துள்ள பிரபலங்கள்!

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு அலரி மாளிகையில் முக்கிய அரசியல் பிரபலங்கள் குவிந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்குகொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி முன்னிலையில் இன்று காலை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் அலரி மாளிகையில் குவிந்துள்ளனர்.

Latest Offers