உடனடியாக அனைத்தையும் சரி செய்வோம்! பிரதமர் ரணில் விசேட உரை

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி காரணமாக மோசமடைந்திருந்த இயல்பு நிலை விரைவில் சரிசெய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் வைத்து சற்று முன்னர் உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்நதும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ அரசியல் நெருக்கடி காரணமாக துரதிர்ஷ்டவசமாக சில வாரங்கள் மோசமடைந்தாலும் நாட்டின் இயல்பு நிலையை உடனடியாக சரி செய்வோம்.

நாடாளுமன்றம், நீதிமன்றம் என்பன நாட்டில் ஜனநாயகத்தினை நிலைநாட்ட நீதியுடன் செயற்பட்டன. இது மக்களுக்கு கிடைத்த நீதி.

இந்நிலையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நான் பிரதமராக பதவியேற்றுள்னே்.

அடுத்ததாக அமைச்சரவை பதவியேற்கும். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முழுமையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers