ரணில் பிரதமர் பதவியேற்றதையடுத்து ஹட்டனில் ஆரவாரம்

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5வது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமர் பதவியேற்றுள்ளார்.

இதனை கொண்டாடும் வகையில் ஹட்டனில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்ததோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்வின் போது, ஹட்டன் டிக்கோயா நகர சபையின் உப தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஹட்டன் நகரத்தில் பொலிஸாரின் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

Latest Offers