அங்கஜனும் ரணில் பக்கம் தாவுகிறாரா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையானது அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இந்நிலையில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய ஆதரவினையடுத்து ரணில் விக்ரமசிங்க தன்னுடைய 117 என்னும் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் காண்பித்ததன் விளைவாக, ஐக்கிய தேசிய முன்னணி என்னும் தனியமைப்பாக பிரதமர் ரணில் தலைமையில் புதிய அரசாங்கம் உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இணைவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வெளியாகியிருந்த தகவல்களின்படி, புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐதேமு இ ணவதற்கான விருப்பத்தினை தெரிவித்தனர் என்று தெரியவந்தது,

இதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் சம்மதம் தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரணில் தலைமையிலதான அரசாங்கத்தில், துமிந்த திசநாயக்க, அங்கஜன் இராமநாதன், பைசர் முஸ்தபா, விஜித் விஜிதமுனி சொய்சா, மகிந்த சமரசிங்க, லசந்த அழகியவன்ன, லக்ஸ்மன் செனிவிரத்ன, வீரகுமார திசநாயக்க, ஆகிய ஒன்பது பேரும் இணைவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 21 பேர் இணைவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers