ரணிலை கட்டுப்படுத்தும் கூட்டமைப்பு! எப்படி இது சாத்தியம்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பெரும்பான்மை இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு அரசாங்கம் அமைக்கும் ரணில் தரப்பினரை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் பிணையக் கைதியாக வைத்திருக்கப் போகின்றார்கள் என்று எச்சரித்திருந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச.

நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னர், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து நேற்றைய தினம் விலகினார். தான் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து கையெழுத்துப் போட்ட பின்னர் பேசினார். அப்போது பேசிய மகிந்த,

103 ஆசனங்களைக் கொண்டிருக்கும் ரணில் தரப்பினருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 ஆசனங்களும் இணைந்து 117 என்று தங்கள் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்கள்.

இதுவொரு நிச்சையமற்ற அரசாங்கம். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் ஆதரவினை நீக்குவார்களாயின் ஆட்சி கவிழ்ப்பு நடக்கும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த அரசாங்கத்தை பிணையக் கைதியாக வைத்திருக்கிறது.

ரணில் அரசாங்கத்தை இயக்கும் ரிமோட் கன்ரோலர் கூட்டமைப்பிடம் தான் இருக்கிறது. இது நாட்டிற்கு ஆபத்தானதாக அமையும் என்று பேசியிருந்தார். நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படும் விதமாக மகிந்த ராஜபக்ச பேசியிருப்பதாக சமூக செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமாகிய சுனந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவித இரகசிய உடன்படிக்கையும் இல்லை. இந்த நாட்டை வெற்றிப் பாதையை நோக்கி முன்னெடுத்துச் செல்ல முடியுமான தகுதி ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளது.

கடன் சுமையை அடைக்க தேவையான பொருளாதார திட்டம் எதுவும் இல்லாமல், வெளிநாட்டுக் கடன்களை பெற்று, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது கடந்த 2007 – 2014 ஆட்சிக் காலப் பகுதியிலேயே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers