மகிந்தவின் உரைக்கு ஐ.தே.கட்சியின் பதில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எவ்வித இரகசியமான உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தில் நேற்று கையெழுத்திட்ட பின்னர் ஆற்றிய விசேட உரையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைத்தாலும் அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே இருப்பதாக கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே வஜிர அபேவர்தன இதனை கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள் தள்ளியதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த் வஜிர அபேவர்தன, பொருளாதாரத்தை வெற்றிகரமான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

திரும்ப செலுத்த தெளிவான வழிமுறைகள் இல்லாமல் கடந்த 2007 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டும் பாரியளவில் கடன் பெறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers