தேர்தல் ஒன்றுக்கு தயாராகுங்கள்! பிரதமர் ரணில் அதிரடி?

Report Print Murali Murali in அரசியல்

தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணியினருடன் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து அலரி மாளிகையில் வைத்து விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார். இந்நிலையில், பிரதமருக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின் போது தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அது ஜனாதிபதி தேர்தலாக கூட இருக்கலாம் என்று தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Latest Offers