பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமனம்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.

சமன் ஏக்கநாயக்க இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக பணியாற்றினார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமித்ததை அடுத்து, பிரதமரின் செயலாளரும் மாற்றப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்றதை அடுத்து, சமன் ஏக்கநாயக்க மீண்டும் அவரது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest Offers