ஐ.தே.கட்சியில் இருந்து வந்தவர்கள் மீண்டும் செல்ல மாட்டார்கள்: பசில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வந்து மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்ட எவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மீகொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் மரியாதை காரணமாக தான் இதனை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் தாம் அரசாங்கத்தில் இணைய போவதில்லை என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு அறிவித்துள்ளனர் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers