குட்டி 'பட்ஜட்' விரைவில் சபையில் முன்வைப்பு - ஐ.தே.க. தகவல்

Report Print Rakesh in அரசியல்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முதல் இரு மாதங்களுக்கான இடைக்கால நிதி ஒதுக்கீட்டு யோசனை எதிர்வரும் 26ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச துறையினருக்கான வேதன கொடுப்பனவுகள், அவசரமாக மேற்கொள்ள வேண்டிய கொள்வனவுகள், எரிபொருள் இறக்குமதி மற்றும் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளுக்கு இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பின்னர் 2009ஆம் ஆண்டுக்கான முழுமையான வரவு - செலவுத்திட்ட யோசனையை முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

Latest Offers