ரணில் பதவியேற்ற போது சுமந்திரன் தொலைக்காட்சியில்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து ஐந்தாவது முறையாக பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமையானது, அரசியலமைப்புக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை, நாளை அல்லது நாளை மறுநாள் புதிய அமைச்சர்கள் பொறுப்புக்களைப் பெற்றுக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்,ஏ சுமந்திரன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது, நாடாளுமன்றத்தைக் கலைத்தது போன்றன அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில் இருந்து அந்த வழக்குகளை சிறந்த முறையில் வாதாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers