நான்கு ஆண்டுகளாக நான் கடந்து வந்த அனுபவத்தில் சொல்கிறோன்: மைத்திரி கவலை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எமது நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியாமல் போனமைக்கு அரசியல்வாதிகள் தான் காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி,

அரசியல்வாதிகளே, இலங்கையை அபிவிருத்தி செய்ய, பிரதான தடைக்கல்லாக அமைகின்றது.

ஜனாதிபதி என்ற வகையில் கடந்த 4 வருடங்களாக நான் கடந்து வந்த அனுபவங்களில், அரசியலில் பெரும்பாலானவர்கள் ஊழல் நிறைந்தவர்களாகவே இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடு ஊழலில் சிக்கியிருக்கிறது. அபிவிருத்தியை நோக்கி நகர முடியாமல் இருப்பதற்கும் இந்த அரசியல்வாதிகளின் ஊழல்தான் காரணம் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Latest Offers