மைத்திரி - ரணிலுக்கு இடையிலான மோதல் தீவிரம்! சர்வதேச ஊடகம் வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் அரசியலமைப்பு பிரச்சினைக்கு தற்காலிகமாக தீர்வுக்காணப்பட்டுள்ளது.

எனினும் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் தூரத்தில் உள்ளதாக அல் ஜெசீரா செய்திசேவை அறிவித்துள்ளது.

இலங்கையின் அரசியமைப்புக்கு முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலக்கிய ஜனாதிபதி , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து எழுந்த பிரச்சினைகளுக்கு இறுதியில் உயர்நீதிமன்றம் தீர்வை வழங்கியுள்ளது. இதன்படி மீண்டும் ரணில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எனினும், அவருக்கு அந்தப்பதவியை வழங்கமாட்டேன் என்று சூளுரைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினை தீரவில்லை என்றும் அல் ஜெசீரா செய்திசேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ரணில் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற சந்திப்பின்போது, மைத்திரிபால, ரணிலின் கடந்த மூன்று வருடக்கால ஆட்சி தொடர்பாக வெளியிட்ட கடுமையான குற்றச்சாட்டுக்கள் இதனை உணர்த்துவதாகவும் அல் ஜெசீரா குறிப்பிட்டுள்ளது.