இலங்கை நீதித்துறை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது! பொதுநலவாய நாடுகள் அமைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் அரசியலமைப்பு முறுகல் நிலை முடிவுக்கு வந்துள்ளமையை பொதுநலவாய நாடுகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

ஒரு நாட்டின் ஜனநாயக பலத்திற்கு சட்டம் ஒழுங்கு மற்றும் மக்களின் அர்ப்பணிப்புக்கள் அவசியம் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் பற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலேன்ட், இலங்கையில் ஜனநாயகம் மீறப்பட்டமையை நீதித்துறை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு மாற்றங்கள் மற்றும் நல்லிண்ணம் என்பவற்றுக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கனேடிய வெளியுறவு அமைச்சர் கோரியுள்ளார்.

Latest Offers