அடுத்த மாதத்தில் முக்கிய நகர்விற்கு தயாராகும் மைத்திரி?

Report Print Vethu Vethu in அரசியல்

அடுத்த வருடத்தின் ஜனவரி மாதத்தின் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிக்கு பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

9ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதியிடம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

காலி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைய சமகாலத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.