அப்போது கொடுத்தார்கள் இப்போது முடியாதா? ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவுரை வழங்கும் கம்மன்பில

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியினரே நீங்கள் அடுத்தவர்கள் பிழைகள் குறித்து தேடாது உங்களது பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான வாதங்கள் நேற்றைய தினம் எழுந்தபோது, சபையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி அரசாங்கத்தில் இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என தர்க்கங்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் டீ.பி.விஜயதுங்க ஜனாதிபதியாக இருந்த போது காமினி திஸாநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார்.

அத்துடன் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது ரட்ணசிறி விக்ரமநாயக்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

2015ஆம் ஆண்டில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இதன்படி இப்போதும், வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினரே நீங்கள் அடுத்தவர்களின் பிழைகளை பற்றி தோடாமல் உங்களது பிழைகளை திருத்திக்கொள்ளுங்கள் என மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers