புதிய அமைச்சரவை தொடர்பில் கசிந்த தகவல்!

Report Print Jeslin Jeslin in அரசியல்

புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சு இல்லை என்றால் அமைச்சு பதவியே வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளதுடன், தனக்கு நிதி அமைச்சே வேண்டும் என ரவி கருணாநாயக்க பிடிவாதமாக உள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்திற்கு பிரதி அல்லது இராஜாங்க அமைச்சு பதவி கொடுக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் திகாம்பர் ஆகியோருக்கு அமைச்சு பதவிகளும், வே. இராதாகிருஷ்ணனுக்கு கல்வி இராஜாங்க அமைச்சுடன் மேலதிகமாக ஒரு இராஜாங்க அமைச்சும் கிடைக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மைத்திரி அணிக்கு கட்சி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், நிதி அமைச்சு இன்னும் இழுபறி நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers