இலங்கையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட முறுகல் நிலை! பிரித்தானியா பாராட்டு

Report Print Malar in அரசியல்

இலங்கையின் அரசியல் நிலைமைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என பிரித்தானிய வெளி விவகாரப் பணியகத்தின் ஆசிய பசுபிக் விவாகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நெருங்கிய நண்பனாகவும், பங்காளராகவும் இலங்கையுடன் பிரித்தானியா தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார மீட்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் உள்ளிட்ட நிலையான அபிவிருத்திக்கு ஆதரவளிப்போம்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை முன்னேற்றும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பிரித்தானியா கடமைப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இலங்கைக்கு 8.3 பில்லியன் பவுண்களை முரண்பாடு, உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பு நிதியிலிருந்து பிரித்தானியா வழங்கியுள்ளது.

பொலிஸார் மறுசீரமைப்பு, பயிற்சி, நல்லிணக்கம், அமைதியைக் கட்டியெழுப்பல், மீள்குடியமர்வு, கண்ணி வெடி அகற்றல் போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Latest Offers