முக்கிய அமைச்சு பதவியை கேட்டு அடம் பிடிக்கும் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தனிநபர்களின் நோக்கங்களுக்காக தேர்தலை நடத்த முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வரும் காலங்களில் மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பிரதிபலன்கள் கிடைக்கும் வகையில் செயற்பட கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை கலைக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காலம் மீதம் இருக்கின்றது. எனினும் இன்னும் 9 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனிடையே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு எனக்கு கிடைக்க வேண்டும். இந்த அமைச்சு கடந்த அரசாங்கத்தில் எனக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும் சட்டம் மற்றும் ஒழங்கு அமைச்சு எனக்கு கிடைக்கவில்லை.

புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் போது சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு கிடைக்குமா கிடைக்காத என்பது குறித்து கருத்து வெளியிட முடியாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டு்ளளார்.

Latest Offers