சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 6.30க்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால ஆகியோரை சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் அணியில் அங்கம் வகித்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகினர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகும் விடயத்தில் இவர்கள் நால்வரும் முக்கிய பங்காற்றியதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.