நிலையான கொள்கையற்றவர்களை மீண்டும் அரசாங்கத்தில் இணைத்து கொள்ள தேவையில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

நிலையான கொள்கையற்றவர்களை மீண்டும் அரசாங்கத்தில் இணைத்து கொள்ள தேவையில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கடந்த கால செயற்பாடுகள், தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் அவர்கள் நடந்துக்கொண்ட விதம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் ஆகியோர் அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஆறுமுகம் தொண்டமான் உட்பட அவரது அணியை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து ஐக்கிய தேசிய முன்னணி இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நடந்த அரசியல் மாற்றத்தின் போது இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துக் கொண்டனர்.

எனினும், அரசாங்கம் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைத்துள்ளதால், தொண்டமான், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி விருப்பம் வெளியிட்டுள்ளார்.

தொண்டமானை புதிய அரசாங்கத்தில் இணைத்துக்கொள்வது சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இணைய தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

Latest Offers