அவர் சிலருக்கு பூனைக்குட்டி! கூட்டமைப்பினர் புலிகளல்லர்: ஐ.தே.க

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஒருவரை பிரித்தெடுக்கும் போது அவர் சிலருக்கு பூனைக்குட்டியாகத் தெரிந்தார், ஆனால் எம்மோடு இணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுக்கு புலிகளாகத் தெரிகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்கும் தலைமைத்துவம் தற்போது வடக்கில் உருவாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஒருவரை பிரித்தெடுக்கும் போது அவர் சிலருக்கு பூனைக்குட்டியாகத் தெரிந்தார், ஆனால் எம்மோடு இணையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுக்கு புலிகளாகத் தெரிகின்றனர். அவர்களோடு இணைந்து செயற்பட்டால் எம்மைப் புலி என்கின்றார்கள்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றவே மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஜனாதிபதியாக்கினோம்.

மகிந்தவுடன் சேர்ந்து கள்ள ஒப்பந்தங்களைச் செய்யவும் சட்டவிரோதமாக அரசொன்றை அமைக்கவும் நாங்கள் அவரை தெரிவு செய்யவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers