மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினரா? ரகசியத்தை வெளிப்படுத்திய நாமல்

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான சர்ச்சை தீர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் மஹிந்த தொடர முடியாது எனவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கருத்து வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் உள்ள பிரச்சினை தொடர்பில் ஹர்ஷ டி சில்வா அவதானம் செலுத்தியுள்ள முறை ஆச்சரியமாக உள்ளது.

பயப்பட வேண்டாம் அதனை நாங்கள் தீர்த்து கொள்கின்றோம். ஏன் அமைச்சரவை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை நீங்கள் தீர்க்கவில்லை? முழு நாடு அதனை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகிறார். மஹிந்தவை பிரதமராக கொண்டு வந்த ஜனாதிபதியால் அதனை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது மஹிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கக் கூடிய வழிவகைகளை செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் மைத்திரியுடன் நட்புறவுடனான உறவு தற்போது தொடர்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers