மகிந்த தாமரை மொட்டில் இணையவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

மகிந்த ராஜபக்சவோ நாமல் ராஜபக்சவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று, சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல - நீங்கள், மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட 50 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதாக டுவிட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவில்லையா?

சுசில் பிரேமஜயந்த - நான் மட்டுமல்ல, மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட எவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவதை பெறவில்லை என பதிலளித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எனக் கூறியிருந்தார்.

Latest Offers