எந்த மாற்றமும் இல்லை! விடாப்பிடியாக நிற்கும் துமிந்த திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தான் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தான் அமைச்சு பதவிகளை வழங்க போவதில்லை என ஜனாதிபதி கூறிய பின்னர், துமிந்த திஸாநாயக்க தனது இந்த முடிவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தனக்கு அமைச்சர் பதவியை வழங்கினாலும் வழங்காவிட்டாலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.