விரைவில் ஆட்சியை பிடிப்பேன்! மஹிந்த சூளுரை

Report Print Vethu Vethu in அரசியல்

விரைவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான போராட்டம் தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து பதவியை இராஜினாமா செய்த போதும், ஆட்சியை பிடிப்தற்கான முயற்சிகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற மத நிகழ்வில் மஹிந்த இந்த கருத்தினை வெளியிட்டார்.

உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர், நாட்டு மக்கள் குறித்து சிந்தித்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்தேன்.

நாட்டினை நிச்சயமற்ற நிலைக்கு தள்ள முடியாது என்பதனால் பதவியை விட்டுக் கொடுத்தேன்.

எமது கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers