ராஜபக்ச அணியினர் தமது ஆதரவாளர்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர்!

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர், அவர்களின் அப்பாவியான ஆதரவாளர்களை முட்டாளாக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொள்ளவில்லை என கூறி வருவது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

எது உண்மை? மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாப உறுப்பினர்கள்.

தாம் அந்த கட்சியில் இணையவில்லை என அவர்களின் அப்பாவியான ஆதரவாளர்களை முட்டாளாக்க முயற்சித்த போதும் அது வெற்றியளிக்க வில்லை என ஹர்ச டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் ஒருவர், அந்த கட்சியில் இருந்து விலகி வேறு ஒரு அரசியல் கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட பின்னர், ஒரு மாத காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அவர் முன்பு அங்கம் வகித்த கட்சியில் வகித்து வந்த பதவிகள் சட்டத்திற்கு அமைய தானாகவே இரத்தாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தல் நடக்கும் என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொண்ட மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers