ரணிலை கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க சூழ்ச்சி!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் சூழ்ச்சித் திட்டம் அந்த கட்சிக்குள்ளேயே ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக விரும்புகிறார். அவர் தனது பிரபலத்தை அதிகரிக்க பல மில்லியன் ரூபாய் பணத்தை செலவிட்டு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இதன் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் தலைவர் பதவி மட்டுமல்ல கட்சியின் உறுப்பினர் பதவியும் இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், ரணில் விக்ரமைசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தாது, தனது கட்சித் தலைவர் பதவியை காப்பற்றிக்கொள்ள வேண்டும் எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.