சம்பந்தனின் பதவியை காப்பாற்றும் தீவிர முயற்சியில் சுமந்திரன்

Report Print Vethu Vethu in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தற்காலிகமாக இரண்டு மாதங்களுக்கு இரத்துச் செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற தெரிவு குழுவொன்றை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரிடம் இன்று யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

உரிய தீர்மானத்திற்கு வரும் வரை எதிர்க்கட்சி தலைவர் பதவியை 2 மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்யுமாறு யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இணைந்து இந்த யோசனையை ஒப்படைத்துள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்காமல் இருப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முயற்சிப்பதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஈழ நோக்கத்தை நிறைவேற்றி கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

Latest Offers