சுதந்திரக்கட்சியினருக்கு அமைச்சர் பதவியை வழங்க மாட்டேன் என்பது மோசமான அரசியல்! பிமல் ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தில் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க போவதில்லை என ஜனாதிபதி கூறுவது மிக மோசமான நிலைமை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இணையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதில்லை என ஜனாதிபதி கூறுகிறார்.

இது மிகவும் மோசமான தவறான நிலைமை. எனினும் தன்னிடம் சென்றவர்களுக்கு ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வழங்கினார். இது சிறந்த அரசியல் அல்ல.

ஜனாதிபதி பதவியை தனிப்பட்ட நலனுக்காக அல்ல நாட்டின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும். உயர் பதவிகள் கிடைத்ததும் சிலருக்கு கொம்பு அல்ல கொம்பு தட்டுகள் முளைக்கும்.

ஜனாதிபதி தன்னை இங்கிலாந்தின் பங்கிஹாம் அரண்மனையில் இருக்கும் ஒருவராக நினைக்கின்றார் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.