அமைச்சு பதவி வழங்க மாட்டேன்! மீண்டும் மைத்திரி அதிரடி

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கட்சி தாவிய அனைவரும் கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சற்று முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“நாளை காலை அமைச்சர்கள் பதவியேற்க கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனினும், அமைச்சர்களின் பட்டியலை தான் இறுதி செய்த பின்னரே அது நடக்க வாய்ப்பிருப்பதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எவருக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட எவருக்கும் அமைச்சு பதவி வழங்கக் கூடாது என நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.