19வது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு உரித்தான அமைச்சுக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் 51வது சரத்திற்கு அமைய ஜனாதிபதி மூன்று அமைச்சுக்களை மாத்திரமே தன்வசம் வைத்திருக்க முடியும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனடிப்படையில், பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளை மட்டுமே ஜனாதிபதி தனது பொறுப்பின் கீழ் எடுத்துக்கொள்ள முடியும் எனவும் அவற்றை தவிர மேலதிக அமைச்சுக்களை ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாது என்பது தெளிவானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers