சிங்கள மக்களுக்கு மறைத்து கொண்டு வரும் திருத்தங்களில் பயனில்லை!

Report Print Steephen Steephen in அரசியல்

சிங்கள மக்களுக்கு மறைத்து நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதில் பயனில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கிட்டு கருத்து வெளியிடும் போதே மனோ இதனை கூறியுள்ளார்.

சிங்கள மக்களுக்கு மறைத்து அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நாட்டில் உள்ள அனைத்து மகக்ளுக்கு அறிந்திருக்க வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers