கடுமையாக விமர்சிக்கும் மைத்திரி! அமைதியாகவே இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியினர்

Report Print Nivetha in அரசியல்

ஜனாதிபதியின் விமர்சனங்களை ஐக்கிய தேசிய கட்சியினர் ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்யச் சென்றபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரை கடுமையாக சாடி உரை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போது, அனைத்து உறுப்பினர்களும் அமைதியாகவே அதனைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதிலிருந்தே அந்தத் தரப்பினர் ஜனாதிபதியின் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காகத் தான் பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லுமாறு நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

எனினும், இதனை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. தரப்பினர் இல்லாதொழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கெதிராக தற்போது இடைக்காலத் தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பில் எமக்கு பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இதனை ஏற்றுக் கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.