நீடிக்கின்றது குழப்பம்! அமைச்சரவையை நியமிப்பதில் இழுபறி

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள அமைச்சர்கள் அடங்கிய பெயர் பட்டியலில் சிலரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு பின்னர் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அண்மையில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், அமைச்சர்களை நியமிப்பதில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களை நியமிப்பது தொடர்பிலான நெருக்கடி நிலையானது முடிவில்லாது தொடர்ந்துள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜித் விஜிதமுனி சொய்சா, பௌசி, லக்ஷ்மன் செனவிரத்ன, பியசேன கமகே ஆகியோரை உள்ளடக்கி 35 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் ரணில், ஜனாதிபதிக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரதமர் அனுப்பியுள்ள அமைச்சர்கள் அடங்கிய பெயர் பட்டியலில் சிலரின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியிருப்பதாகவும், இதனால் நெருக்கடி நிலை நீடித்திருப்பதாகவும் அரச தரப்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers