இரட்டையில் பிரபல்யம் அடையும் இலங்கை! அன்று பிரதமர் இன்று..?

Report Print Nivetha in அரசியல்

முன்பு ஒரே சமயத்தில் இரண்டு பிரதமர்கள் நாட்டில் இருந்தமை போன்று தற்பொழுது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இலங்கையில் இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஸ தற்பொழுது முன்னாள் பிரதமராகி மீண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிரணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மாத்திரமே சுயபுத்தியுடன் இருப்பவர் என்றும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.