வாழைச்சேனை பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்

Report Print Navoj in அரசியல்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 11 பேரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இன்று காலை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தினால் சமர்ப்பிக்கப்ட்டுள்ளது.

இவ்வரவு செலவு திட்டமானது கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து பிரதேச மக்களினதும் தேவைகளை முன்னுரிமை படுத்தியதான விசேட வேலைத்திட்டங்களை உள்ளடங்கிய வரவு செலவு திட்டம் என்பதை ஏற்றுக்கொண்ட பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஆளும் கட்சி உறுப்பினர்களான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்ச்சியைச் சேர்ந்த 06 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்ச்சியைச் சேர்ந்த 02 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம்ஸ் காங்கிரஸ் கடச்சியை சேர்ந்த 01 உறுப்பினரும், நல்லாட்ச்சிக்கான தேசிய முன்னனியைச் சேர்ந்த 01 உறுப்பினரும், சுயேட்ச்சைக் குழுவைச் சேர்ந்த 01 உறுப்பினரின் ஆதரவுடன் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 06 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 01 உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 01 உறுப்பினரும் வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 உறுப்பினர்கள் நடு நிலையாகவும், ஐக்கிய தேசிய கட்ச்சியைச் சேர்ந்த 02 உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இவ் வரவு செலவு திட்டத்தில் முக்கியமாக உரிமை வருமானத்தில் 40 வீதம் அபிவிருத்தி செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சபையால் செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டத்திற்காக 30 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஏனைய செலவுகளை சிக்கனப்படுத்தி அபிவிருத்தி செலவுகளுக்காக 40 வீதம் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Latest Offers