ரணிலை வரவேற்றுள்ள அமெரிக்கா!

Report Print Murali Murali in அரசியல்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் பல்லாடினோ வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

“கடந்த பல வாரங்களாக இலங்கையில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசியலமைப்பு நெறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட வகையில் தீர்வு கண்டமைக்காக நாங்கள் பாராட்டுகிறோம். இந்தோ- பசுபிக்கின் மிகப் பெறுமதியான பங்காளராக இலங்கை இருக்கிறது.

மேலதிக ஒத்துழைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் மற்றும் இருதரப்பு விவகாரங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், அவரது அமைச்சரவையுடனும் இணைந்து முன்நோக்கிச் செயற்படுவதற்கு நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers