இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கி வைத்தது சீனா!

Report Print Gokulan Gokulan in அரசியல்

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சீன உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறித்த தண்ணீர் பௌசர்கள் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த காலநிலை தாக்கங்களின் காரணமாக அரசாங்கம் ஆரம்பித்த நிவாரண நிகழ்ச்சித் திட்டத்துக்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இந்த தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ததனை குறிக்கும் வகையில் அவற்றின் சாவிகள் மற்றும் ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இந்த ஆவணங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி கையளித்தார்.