மகிந்தவுக்கு தகுதி இல்லை! சம்பந்தன் கடும் காட்டம்

Report Print Nivetha in அரசியல்

எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்ட மகிந்தவுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும், அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் தான் புதிய அரசியலமைப்பை நாடுவதாக கூறியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசியல் அமைப்பின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இணைந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய எதிர்க் கட்சித் தலைவர் பதவியை தற்காலிகமாக இரண்டு மாதங்களுக்கு இரத்துச் செய்யுமாறு சபாநாயகரிடம் இன்று யோசனை ஒன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers