நாளை காலை அமைச்சரவை பதவியேற்கின்றது! உறுதிப்படுத்தினார் மைத்திரி

Report Print Murali Murali in அரசியல்

நாளை காலை புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இரவு இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நாட்டில் அண்மை காலமாக நீடித்திருந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சரவையை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், சில குழப்பநிலை காரணமாக கால தாமதம் ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு அமைச்சு பதவி வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.

அத்துடன், சில அமைச்சு பதவிகளை வழங்குவதிலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, நாளை காலை புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.