மகிந்தவா? சம்பந்தனா? எதிர்க்கட்சி தலைவர் குறித்து ரணில் தரப்பு வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்கட்சி தலைவர் யார் என்பதை நாடாளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து கேள்வியெழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று நாடாளுமன்றம் கூடியது. இதன் போது எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.

எனினும், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியிருந்தார்.

இது குறித்து ஆராய்ந்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனா அல்லது மகிந்த ராஜபக்சவா எதிர்கட்சி தலைவர் என்பதை நாடாளுமன்றின் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிலையியல் கட்டளையின் பிரகாரம் எதிர்கட்சிதலைவர் பதவியினை யாருக்கு வழங்குவது என்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

Latest Offers