நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவேன்! மைத்திரி அதிரடி அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்

தான் பதவியில் இருக்கும் வரையிலும் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“மகிந்த ராஜபக்சவிற்கும் தனக்கும் இடையில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. இந்நிலையில், பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து செயற்பட தீர்மானித்துள்ளேன்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஊழல் செயற்பாடுகளுக்கு எதிரான தமது போராட்டம் தொடரும். அரசமைப்பை மீறும் தீய நோக்கம் ஏதும் தம்மிடம் இருக்கவில்லை.

தாம் தெளிவான மனசாட்சியுடனேயே, தேசத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுத்திருந்தேன்.

அரசியல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தே தேர்தல் தொடர்பான முடிவுக்கு தான் சென்றிருந்தேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

Latest Offers