பதவி விலகியமைக்கான காரணத்தை வெளியிட்டார் மகிந்த!

Report Print Murali Murali in அரசியல்

நாட்டை ஸ்திரமற்றதாக்க விரும்பாததால் தீர்ப்பிற்கு முன்னரே பிரதமர் பதவியிலிருந்து விலகியதாக எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ அனுராதபுரம் புனித பூமிக்கு இன்று சென்றிருந்தார். இதன் போது பல்லேகம சிறிநிவாச தேரரையும் மகிந்த ராஜபக்ச சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜய ஸ்ரீ மகா போதிக்கு சென்ற மகிந்த ராஜபக்ஸ அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைப் போன்று நாட்டை ஸ்திரமற்றதாக்க தான் விரும்பவில்லை.

ஆகையினால், தீர்ப்பிற்கு முன்னரே பதவியிலிருந்து விலகியதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் காரணமாக மகிந்த மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மகிந்த உள்ளிட்ட அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து மகிந்த தரப்பினர் உச்ச நீதிமன்றை நாடினர். எனினும், உச்ச நீதிமன்றம் மனுக்கள் மீதான விசாரணைகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers