முக்கிய அமைச்சுகளை முடக்கிய ஜனாதிபதி! தொடரும் மைத்திரியின் அதிரடிகள்

Report Print Vethu Vethu in அரசியல்

முழுமையான அமைச்சரவையை அறிவிப்பதில் தற்போதும் இழுபறி நிலை ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில் பிரதான அமைச்சுக்களை ஐக்கிய தேசிய கட்சியினருக்கு விட்டுக்கொடுக்க ஜனாதிபதி தயாரில்லை என அறிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று காலையில் பதவியேற்கவுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சுக்கு யாரும் இன்னும் நியமிக்கப்படவில்லை என தெரிய வருகிறது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில், 30 அமைச்சர்களே அங்கம் வகிக்க முடியும் என்பதால், ஜனாதிபதி, பிரதமர் தவிர்ந்த 28 பேரே புதிதாக நியமிக்கப்பட முடியும்.

இந்தநிலையில், அமைச்சர்களாக நியமிப்பதற்கு 35 பேர் கொண்ட பட்டியலை ஜனாதிபதியிடம், ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அனுப்பியிருந்தது. அதில் பலரை ஜனாதிபதி அதிரடியாக நீக்கியுள்ளதாக தெரிய வருகிறது.