அமைச்சரவை நியமித்தவுடன் இடைக்கால கணக்கறிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்தவுடன் இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது இடைக்கால கணக்கறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்கான அரச செலவுகளுக்கு தடை ஏற்படாதென அவர் கூறியுள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்ததில் சமர்ப்பித்த பின்னர் அதற்கான விவாதம் ஒன்று இடம்பெறும். எனினும் அது நீண்ட விவாதம் அல்ல. எனவே அவசியமற்ற தாமதமின்றி கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.