புதிய அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Report Print Sujitha Sri in அரசியல்

எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், மாதம்தோறும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தும் வகையிலான எரிபொருள் விலை சூத்திரமானது மீண்டும் அமுல்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.