உடனடியாக கடமைகளை பொறுபேற்ற அமைச்சர் சஜித் பிரேமதாச

Report Print Steephen Steephen in அரசியல்

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சராக இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட சஜித் பிரேமதாச உடனடியாக அமைச்சுக்கு சென்று தனது கடமைகளை பொறுபேற்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சராக பதவி வகித்த சஜித் பிரேமதாச, கிராம உதயம் திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.